பாபா ராம்தேவ் மீது பிடிவாரண்டு

யோகாகுரு பாபா ராம்தேவ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிரப்பித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு ஏப்ரலில், அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த நிகழ்ச்சியில், ‘பாரத மாதா கி ஜே’ என்று சொல்ல மறுப்பவர்களின் தலைகளை வெட்டுவேன்’ என்று பேசினார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பாபா ராம்தேவ் மீது காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், அரியானா மாநில முன்னாள் அமைச்சருமான சுபாஷ் பத்ரா அரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட், கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி ராம் தேவ்க்கு சம்மன் அனுப்பினார்.

ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அடுத்த அமர்வில் ஜூன் 14ம் தேதி பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால் ஜூன் 14 ஆம்தேதியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து அவர் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியானாவில் தற்போது பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் யோகா தூதராக பாபா ராம்தேவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments