பாலக் பன்னீர் (easy version) in Tamil

பாலக் பன்னீர் (easy version) in Tamil

22
0
பாலக் பன்னீர்
பாலக் பன்னீர் செய்முறை.

பாலக் பன்னீர் செய்ய தேவையானவை:-

பாலக் பன்னீர்
Serves 4
பாலக் பன்னீர் ரெசிப்பி
Prep Time
10 min
Cook Time
10 min
Total Time
20 min
Prep Time
10 min
Cook Time
10 min
Total Time
20 min
Ingredients
 1. பனீர் – 200 கிராம்
 2. பாலக்கீரை – 2 கட்டுகள்
 3. உரித்த பூண்டு இதழ்கள் – 4
 4. இஞ்சி – சிறு துண்டு
 5. திட்டமான சைஸ் வெங்காயம் – 2
 6. பழுத்த தக்காளிப்பழம் – 1
 7. தக்காளி சாஸ் அல்லது கெச்சப் – 1 டீஸ்பூன்
 8. மிளகாய்ப்பொடி -1 டீஸ்பூன்
 9. ஜீரகப்பொடி – 1 டீஸ்பூன்
 10. தனியாப்பொடி -1 டீஸ்பூன்
 11. தாளித்துக் கொட்ட எண்ணெய் – 4 டீஸ்பூன்
 12. உப்பு - தேவையான அளவு
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Print
Tamil http://www.tamizzle.com/
பாலக் பன்னீர் செய்முறை:

பனீரை அழகான சிறிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கீரையைச் சுத்தம் செய்து வேர், தண்டு பாகங்களை நீக்கித் தண்ணீரில் அலம்பி வைக்கவும்.
சற்றுப் பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டரளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து சுத்தம் செய்த கீரையை நறுக்காமலேயே அதனுள் அழுத்தி வேகவைக்கவும்.
கீரை வெந்தவுடன் தீயை நிறுத்தி விடவும்.
ஆறினவுடன் கீரையை வடிய விடவும்.

தக்காளி,பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளை சுத்தம் செய்து நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

கீரையையும் தண்ணீரை ஒட்ட வடித்து மிக்ஸியிலிட்டு அரைக்கவும். தனியாக எடுக்கவும்.

நான் ஸ்டிக் வாணலியிலோ அல்லது அடி கனமான வாணலியிலேயோ எண்ணெயைக் காயவைத்து, அரைத்த வெங்காயக் கலவையை அதில் கொட்டிக் கிளறவும். மிதமான தீயில் கலவை வதங்கித் தொக்கு பத்தில் வரும் போது அதில் சாஸ் பொடி வகைகளையும் சேர்த்துக் கிளறவும்.

எண்ணெய் போதாவிட்டால் சற்று அதிகம் சேர்க்கவும். ஈரப்பசை நன்றாகக் குறைந்ததும், அரைத்து வைத்துள்ளக் கீரையைச் சேர்த்துக் கிளறவும்.மிகவும் கெட்டியாக இருக்கும் போல் தோன்றினால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தாலே போதும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை அதில் சேர்த்துக் கிளறி,மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதிகம் பிறகு கொதித்தால் நிறம் மாறி விடும்.

பாலக் பன்னீர் தயார்.

Palak paneer is a vegetarian dish. Consisting of spinach, tomato, onion and gram masala in a gravy sauce and paneer as a thick paste.

As palak which is known as Spinach in english has an extremely high nutritional value and rich in antioxidants. palak is a good source of vitamins A, B2, C and K, and also contains Magnesium, Manganese, Folate, Iron, Calcium and Potassium.

Paneer known as cheese contains rich Source of Protein which Strengthens our Immune System, Builds Stronger Teeth, Helps Burn More Fat, Reduces Risks of Birth Defects, Relieves Pain and Tiredness, Keeps Hair and Skin Healthy and many more.

Watch How to make Palak Paneer – பாலக் பன்னீர் செய்முறை:-

Comments

comments