நடிகர் வினுசக்கரவர்த்தி மரணம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் 1000 த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தமது 71வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் அவர் காலமானார்.

அவருக்கு கர்ணப்பூ என்ற மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வினு சக்கரவர்த்தியின் உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945 ஆம் ஆண்டு பிறந்த அவர், ரயில்வே துறை ஊழியராக இருந்த நிலையில் தமிழ் திரைப்படங்களில் கதாசிரியாராக அறிமுகமானார்.

பின்னர் படங்களில் குணசித்திர பாத்திரங்களை ஏற்ற அவர், கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதிராஜி உள்பட பல படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments