பிரபல வரலாற்று எழுத்தாளருக்கு பா.ஜ.க. மிரட்டல்!

பிரபல வரலாற்று எழுத்தாளர் ரமச்சந்திர குஹாவுக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் மோடியை இந்திராகாந்தியுடனும், ஜவஹர்லால் நேருவுடனும் தொடர்பு படுத்தி அவர் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமச்சந்திர குஹாவுக்கு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

மேலும் , மோடியை இந்திரா காந்தியுடனோ, அமித்ஷா வை சஞ்சய் காந்தியுடனோ தொடர்பு படுத்தி பேசக்கூடாது என்றும் இந்த பாஜக தலைவர்களை கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளதாக அவருக்கு ஆன்லைனில் கடிதம் வந்துள்ளதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் கடிதங்கள் பலரால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது என்றும் கூறிய அவர் இது வழக்கமாக வருவது தான் என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments