பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது?

பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள். ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல.

பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இயற்கை எண்ணெயை நீக்கும் சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

Source link

Comments

comments