புதிய 2000 ரூபாய் டெல்லி ரயில் நிலையத்தில் பறிமுதல்.

புதிய 2000 ரூபாய். டெல்லி நிஜாமுதீன்:-

டெல்லி ரயில் நிலையத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல். 

ரயில் நிலையத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 27 லட்சம் ரூபாய் பணத்தை சந்தேகத்திற்கிடமான வகையில் எடுத்துச் சென்ற 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை கைது செய்ததுடன், அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவை அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். அவ்வளவு பணம் ஒரே நேரத்தில் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதே போல் நாக்பூரில் ஒரு தனியார் வாகனத்தில் சோதனை நடத்தி போலீசார் அதில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments