பொதுஇடத்தில் சிறுநீர் கழிப்பு..! தட்டிக்கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்..!

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருவர் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து இருவரும் அந்த இடத்திலேயே சிறுநீரும் கழித்துள்ளனர். இதைக் கண்ட ரிக்‌ஷா ஓட்டுநர் ரவீந்தர், பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் உன்னை பார்த்துக்கொள்கிறோம் என மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதைப் பொருட்படுத்தாத ரவீந்தர் வழக்கம்போல அப்பகுதியில் சவாரிக்காக காத்திருந்திருக்கிறார். சிறுதுநேரம் கழித்து சிறுநீர் கழித்த அந்த இருவரும் 10 பேருடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

பின்னர் அந்த கும்பல், ரவீந்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. சரமாரியாகத் தாக்கப்பட்டதில் ரவீந்தர் உயிரிழந்தார்.

பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதற்கு ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments