மத்திய அமைச்சர் மீது தாக்குதல்

மத்திய அமைச்சர் மீது தாக்குதல்:- மேற்கு வங்கத்தில் பரபரப்பு:-

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தொழில்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மேற்கு வங்கம் அசான்சோல் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பிய போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார்.

லேசான காயத்துடன் மத்திய அமைச்சர் தப்பினாலும் அவரது காரை அந்த வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி சின்னா பின்னமாக்கினர்.

மேலும் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சுற்றி வளைத்து அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

மத்திய அமைச்சர் மீது தாக்குதல்

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தம்மையும், தனது காரையும் தாக்கியதாக பாபுல் தெரிவித்துள்ளார்.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments