மலச்சிக்கல் என்றால் என்ன – மல சிக்கல்

மலச்சிக்கல் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.

மலம் எனபது என்ன?

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும்.
அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதமுள்ளவை மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் என்றால் என்ன எனபது குறித்து விளக்கமாக ஒரு விவரம் தருகிறது இக்கட்டுரை.

மலச்சிக்கல் known as constipation in english என்பது மலம் கழிப்பு அரிதாகவும், மலத்தை ஆசன வாய் வெளியேற்றுவதற்கு கடினமாக உள்ள ஒரு நிலையைக் குறிக்கும்.

மலச் சிக்கல்என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு வகையான உடல் உபாதை ஆகும்.

நாம் உட்கொள்ளும் உணவானது சில விதமான காரணங்களால் மலக் குடலில் தங்கி விடுவதாலும், நாம் மலம் கழிக்கும் போதும் , நமது மலம் வெளியேறுவதிலும் சிக்கல் எழுகிறது.

மிகுந்த அல்லது ஓரளவு வலியுடன் மலம் கழிப்பதற்கு மலச்சிக்கல் ஒன்றே பொதுவானக் காரணமாக அமைகிறது.

ஏன் மலச்சிக்கல் ஏற்படுகின்றது?

நார்த் தன்மையான உணவுகளை தவிர்ப்பது.

தேவையான அளவு நீர் அருந்தாமை.
உடற் பயிற்சி / உடலுழைப்பு இல்லாமலிருப்பது.

உணவு பழக்க வழக்கத்தில் ஒழுங்கின்மை.

உயிர்ச்சத்து “பீ” நிறைந்த உணவுகளை சாப்பிடாதது.

மலம் கழிப்பதை பழக்கமாக இல்லாமல் அடக்குதல், தாமதித்து செல்லுதல்.

நீண்ட நேரமாக உடலை ஒரே நிலையில் வைத்திருத்தல்.

பெருங் குடலின் தசைகள் பலவீனமாகுதல்.

போதுமான நீர் அருந்தாமை.

பழங்கள் பச்சை காய்கறிகள் உணவில் சேர்க்க தவறுதல்.

கடும் மல சிக்கல் என்பது மலம், வாயு, குசு வெளியேற்ற முடியாத நிலைமை , மலக்கட்டு (fecal impaction) ஆகியவற்றை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.

மலச் சிக்கல் சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும்; பொதுவான மக்கள் தொகையில் மலச் சிக்கலின் விழுப்பாடு நிகழ்வு) 2-30 சதவிகிதம் ஆக உள்ளது.

மலச் சிக்கல் பல்வேறு காரணங்களைக் கொண்ட ஒரு அறி குறியாகும். இக்காரணங்கள் பின் வரும் இரு வகைப்படும்:-

தடுக்கப்பட்ட மலம்கழித்தல் மற்றும் நமது பெருங் குடல் மெதுவாக மலம் கடத்துவது இது பெருங் குடல் குறையசைவு அதாவது hypomobility என்று அறியப்படுகிறது.

ஏறத்தாழ ஐம்பது சதவிகிதம் நோயாளிகளை மலச்சிக்கலுக்கு மதிப்பீடு செய்ததில் தடுக்கப்பட்ட மலங்கழித்தல் முக்கிய காரணமாக இருப்பதுக் கண்டறியப்பட்டது.

தடுக்கப்பட்ட மலங்கழித்தல் வகையான மலச்சிக்கல் இயக்கமுறை மற்றும் செயற்பாட்டுக் காரணங்களைக் கொண்டுள்ளது.

பெருங் குடல் மலச்சிக்கலுக்கான காரணங்களாக உணவு வகை, வளரூக்கிகள், மருந்துகளின் பக்க விளைவுகள், அடர் உலோக நச்சுத் தன்மை ஆகியவைகள் அறியப்படுகின்றன.

மலச் சிக்கலுக்கு உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களை கொண்டு வருதல், மல மிளக்கிகளை உபயோகித்தல், மலக் குடலைக் கழுவுவல், உயிரியப் பின்னூட்டம் என அறியப்படும் bio-feedback மற்றும் சில தவிர்க்க இயலாத காலத்தில் அறுவைச் சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இதை பகிர்ந்து உதவுங்கள்.

தமிழகம் சார்ந்த அனைத்து முக்கியச் செய்திகளையும் எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தெறிந்து கொள்ளவும்.

மல சிக்கல் நீங்க வழிகள் – மலச்சிக்கல்

Comments

comments