மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு: பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயாவில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் மேலும் ஒரு தலைவர் பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார்.

இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து அரசு மறுபரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் பெர்னார்டு கட்சியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விலகினார்.

அதனை தொடர்ந்து பா.ஜ.க.வின் வடக்கு காரோ மாவட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் பாச்சு மாரக் நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார்.

ஆனால் தற்போது மேகலயா பாஜக அலுவலகமே மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments