மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க

இந்த நிலையில் மத்திய அரசின் மீதான உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த செல்வகோமதி,ஆசிக் இலாகி பாவா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தக்கல் செய்தனர்.

அதில், கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுபாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.

உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஐகோர்ட்டு கிளை பதிவாளர் வழக்கு விசாரணை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு இன்று பிற்பகலில் நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடைக்கு ஐகோர்ட் 4 வாரம் தடை விதித்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments