மாட்டிறைச்சி தடை பேரதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர்!

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளமைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது இந்திய நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியை தந்துள்ளது.

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது.

தற்போது மாட்டிறைச்சியில் தொடங்கி அடுத்து ஆடு, கோழி என அனைத்திற்கும் தடை விதித்து மக்களை பட்டினிப் போடுவார்கள்.

இது மக்களின் அடிப்படை உரிமையை பரிக்க கூடிய செயலாகும். மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாடதும் மக்களின் உரிமை.

மக்களின் அடிப்படை உணவு உரிமையை பரிக்க கூடிய இந்த தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

மத்திய பாஜக அரசு மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர்.

மூன்றாண்டுகளில் பாஜக தேர்தலலில் கொடுத்த வாக்குறுதியான வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவாதாக கூறினர்.

ஆனால் 3 ஆண்டுகளில் 45 லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால் பாஜக 7 சதவீதம் தான், பாஜக பொருளாதார வளர்ச்சியில் கூட இலக்கை எட்டவில்லை.

பாஜக காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்களின் பெயர்களை மாற்றி அவர்கள் கொண்டுவந்ததாக கூறுகின்றனர்.” என்று கூறினார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments