மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு நெருக்கடி; மாடுகளை விற்க மத்திய அரசு தடை!

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய ஆளும் பாஜக அரசு தடை விதித்துள்ளது.

ஆளும் மத்திய பாஜக அரசு மாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும்.

மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல, விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மிருக வதைக்கு எதிராக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் மாட்டிறைச்சி விற்பனை செய்வோருக்கு கடும் நெருக்கடியை மத்திய அரசு கொடுத்துள்ளது.<
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments