மாட்டுக்கறி வைத்திருந்ததாக போலீஸ் ரெய்டு

உத்திர பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரவியதை அடுத்து காவல்துறை நடத்திய ரெய்டில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக பசு பாதுகாப்பு என்றா பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) முசஃப்பர் நகர் ஷெர்பூர் கிராமத்தில் கறிக்காக மாடுகள் அறுப்பதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு காவல்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டது. ஆனால் அங்கு மாட்டுக்கறி எதுவும் சோதனையில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் காவல்துறைக்கு எதிராக அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் இதில் இரண்டு காவல்துறை காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஷாஜித் என்ற அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், காவல்துறை என் வீட்டுக்கு வந்து மாட்டுக்கறி வைத்திருக்கிறாயா? என கேட்டனர்.

நான் ஒன்றும் புரியாமல் அப்படி எதுவும் இல்லையே என்று பதிலளித்தேன். மேலும் நான் ரம்ஜான் நோன்பு வைத்திருந்தேன். ஆனால் காவல்துறையினர் அதனை சட்டை செய்யாமல் என்னை தாக்கத் தொடங்கினர். என்றா.

[ad_2]

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments