முகச் சுருக்கத்திற்க்கான கிரீம் செய்யவது எப்படி ?

முகச் சுருக்கத்திற்க்கான கிரீம் (நிவாரணி)

ஏழே நாட்களில் முகசுருக்கம் நீங்கி பொலிவான முகம் பெற, எளிய முறையில் வீட்டிலேயே எளிதில் செய்யக் கூடிய முகச் சுருக்கநிவாரணி:

சில நேரங்களில் நமக்கு தேவையான அழகு சாதனப் பொருட்களை நாமே உருவாக்கி கொள்வது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகும்.

எத்தனை கிரீம்கள், ஆண்களுக்கென்று பெண்களுக்கென்று, பேஸ் வாஸ், பேஸ் கிரீம், பேர்னஸ் கிரீம் என்று எத்தனை அழகு சாதனப் பொருட்கள் வந்தாலும், அவை அனைத்தும் ரசாயனம் கலந்தவை என்ற உண்மையை உணர வேண்டும்.

நம் உடலில் படக் கூடிய பொருட்கள் நம்மால் உருவாக்கப் பட்டு, நாமே உபயோகிக்கும் போது, நிகழும் இயற்கை மாற்றங்களை நம்மால் உணர முடியும்.

ஏனெனில் இது இயற்கை, இந்த பொருட்கள் மற்றும் நம் கண் முன்னே உள்ள பொருட்களைக் கொண்டு நாமே உருவாக்குவதால் நம் உடல் மாற்றங்களை நாம் உணர்ந்து செயல் பட முடியும்.

ஆண் மற்றும் பெண் இரு பாலருமே இதை உபோயோகிக்கலாம், ஆண்கள் முகத்தில் பூசும் போது, முடி உடைய பாகங்கள் தவிர்த்து எல்லா இடங்களிலும் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.

அந்த வகையில், வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக் கூடிய இந்த முகச் சுருக்க கிரீம் (நிவாரணி) உங்களுக்கு நல்ல பலனை தரும் என நம்புகிறோம்.

முகச் சுருக்கத்திற்க்கான கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:

இயற்கை தேன் – அரை தேக்கரண்டி

முட்டை மஞ்சள் கரு – ஒன்று

தேங்காய் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி

பாதாம் எண்ணை – இரண்டு தேக்கரண்டி – சுத்தமான பாதம் எண்ணெய் வாங்கிட

இந்த முகச் சுருக்கத்திற்க்கான கிரீம் எப்படி தயாரிப்பது ?

தேன், மஞ்சள் கரு மற்றும் பாதம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மேற் கூறப்பட்ட இரு கலவைகளும் நன்றாக கலந்து, மிருதுவான கட்டிகளற்ற கிரீம் பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.

கலவைகளை கலக்க ஒரு சிறிய தேக்கரண்டி உபயோகிக்கவும், சிறிய முட்டை கலக்கி ( Egg beater ) உபயோகித்தும் செய்யலாம்.

பின்பு ஒரு சிறிய டப்பாவில் அடைத்து வைத்து பின்பு தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.

இதை அறை வெப்ப நிலையில் ( up to 30 degree ) வைத்து ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்.

முகச் சுருக்கத்திற்க்கான கிரீம் எப்படி உபயோகிப்பது ?

முகத்தை நன்றாக வெறும் நீரில் கழுவி துடைத்து கொள்ளவும்.

பின்பு இந்த கிரீமை முகத்தில் ஒரே சீராக தடவி, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு கழுவி விடவும்.

இரவு தூங்கச் செல்லும் போது இட்டு அதி காலையில் கழுவது நல்ல பலனை தரும்.

இந்த முகச் சுருக்க நீக்க கிரீம் தயாரித்து உபோயோகப் படுத்தி விட்டு, உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டங்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Comments

comments