Home உடல் நலம் ~ Tamil Health முகம் பொலிவாக வேண்டுமா? எளிய குறிப்புகள்

முகம் பொலிவாக வேண்டுமா? எளிய குறிப்புகள்

32
0
முகம் பொலிவாக வேண்டுமா
பொலிவான முகம் வேண்டுமா

முகம் பொலிவாக வேண்டுமா:-

புதினா:-

ஒரு பௌலில் பாத்திரத்தில் கையளவு புதினாவை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்துளைகளில் தங்கியிருந்த அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவாக வேண்டுமா?

எலுமிச்சையும், வெள்ளரியும் ஓர் சிறந்த சேர்க்கை ஆகும். எலுமிச்சையில் இருக்கும் சிறந்த மூலப்பொருட்கள் உங்களது சருமத்தை தெளிவுற உதவுகிறது மற்றும் அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உங்களது சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

பின்பு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் எலுமிச்சை சாற்றை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பொலிவடையும்.

முகம் அழகு பெற எளிய வழிகள் மற்றும் குறிப்புகள்

சிறுது நேரம் நறுக்கிய வெள்ளரியை துண்டுகளை உங்களது முகத்தில் வைத்து எடுப்பதினால், உங்களது சருமம் மிருதுவாக மாறும். இதனை தினசரி செய்துவந்தால் முகம் விரைவில் பொலிவடையும்.

முகம் பொலிவாக வேண்டுமா ? என்றால் வேப்பிலை உப்யோகியுங்கள் :-

வேப்பிலையின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வாரம் ஒரு முறை வேப்பிலை நீரால் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சியடைந்து, சருமத்தில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தாலும், அவை குணமாகும்.

முக்கியமாக நீங்கள் முகப்பருவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தல், வேப்பிலையை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், பருக்கள் மறைந்து, முகம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கடலை மாவுடன் மஞ்சள் அல்லது கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள்.

அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பொலிவாக அடையும்.

கறிவேப்பிலை:-

பொதுவாக கறிவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மட்டும் தான் பயன்படும் என்று தெரியும். ஆனால் அவற்றைக் கொண்டு கரும்புள்ளிகளைப் போக்கலாம் என்பது தெரியுமா?
அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலை நீரில் போட்டுஇ அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, நீரை வடித்து, அந்த நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

துளசி:-

துளசியும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு துளசியை நீரில் நனைத்து, அதனை மூக்கின் மேல் 6 நிமிடம் வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

வெற்றிலை:-

வெற்றிலையை அரைத்து, அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments