முதலில் உங்களை சுத்தம் செய்யுங்கள்: யோகி ஆதித்யநாத்துக்கு தலித்துகள் தயாரித்துள்ள சோப்பு!

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உடலை சுத்தம் செய்யுமாறு தலித் அமைப்பு ஒன்று 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றை தயாரித்துள்ளது.

 

கடந்த வாரம் உத்திரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிடச் சென்றிருந்தார்.

அப்போது அவரது வருகைக்கு முன்னர், அரசு அதிகாரிகள் அங்குள்ள தலித் மக்களுக்கு சோப்பு, சாம்பூ மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி முதல்வர் முன்பாக வருகையில் குளித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தியிருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலித் அமைப்பு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றைத் தயாரித்து, அதை உபி முதல்வர் யோகிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த டாக்டர். அம்பேத்கர் வேன்ச் பிரதிபந்த் சமிதி என்ற அமைப்பு இந்த செய்தியை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து பேசுகையில், “முதல்வர் யோகியின் நடவடிக்கைகள் அவரது சாதியம் சார்ந்த அணுகுமுறைகளைக் காட்டுகின்றன.

அவர் தன்னையே சுத்தம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சோப்பானது பொதுமக்களின் பார்வைக்காக வரும் ஜூன் 9-ஆம் தேதி வைக்கப்படும்.

அதன்பின், அந்த சோப்பு முதல்வர் யோகிக்கு அனுப்பப்படும்” என்றனர்.

மேலும், அவர்கள் ஏன் இந்த சோப்பின் நீளம் 16 அடியாக உள்ளது என தெரிவிக்கவில்லை.

குஜராத்தில் உள்ள தலித் சமுதாயத்தைச் சார்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களிடம் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து, தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிராக ஏன் மௌனம் காக்கிறீர்கள் போன்ற வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களையும் கொடுக்கவுள்ளதாக இந்த தலித் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments