முதல்வர் ஜெயலலிதா பணிக்கு திரும்புகிறார்

முதல்வர் ஜெயலலிதா பணிக்கு திரும்புகிறார்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலைக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பெலே மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து 50 நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குணமடைந்து விரைவில் அரசுப்பணிக்கு திரும்ப தமிழகம் முழுவதும் யாக பூஜைகளும், வேண்டுதல்களும் அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர்.

சமீபத்தில் லண்டன் டாக்டர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவிட்டதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா பணிக்கு திரும்புகிறார்

இந்நிலையில், அதிமுக செய்திதொடர்பாளர் பொன்னையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று பூரணமாக குணமடைந்துவிட்டது.

தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்கது அரசு பணிக்கு முதல்வர் திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் உடல்நிலை குறித்து இந்த பேட்டியால் அதிமுகவினர் பெரும் சந்தோஷத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments