மென்மையான கைகள் வேண்டுமா உங்களுக்கு

மென்மையான கைகள் வேண்டுமா ?

வீட்டு வேலைகள் உட்பட பல இதர வேலைகளை செய்வதால் ஆண்கள் மற்றும் பெண்களின் கைகள் சொர சொரப்பாகவும், கடினமாகவும் எளிதில் மாறிவிடுகின்றன.

கைகள் சொர சொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும்.

இதனால் நாளடைவில் முகம் தொய்வடைந்து விடும். எனவே கைகள் மற்றும் விரல்களின் மென்மையை காக்க வேண்டியது அவசியம்.

மென்மையான கைகள் வேண்டுமா ?

தினமும் இரவு ஒரு பாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும்வரை கைகளை அதில் மூழ்கும்படி வைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவதுடன், கை வலி நீங்கி மெதுவாக ஆகும்.

பின்னர் கைகளைத் துடைத்துவிட்டு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக்கொண்டு, கைகளை சர்க்கரையில் புரட்டவும்.

கை முழுவதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும், இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரை கரையும். சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால், இது கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சுருக்கங்களைப் போக்கி மலர்ச்சியாக்கும்.

கைகள் சொரசொரப்பாக ஆரம்பிக்கும், காலகட்டத்திலேயே தினசரி இந்த சிகிச்சையைத் தொடர்ந்தால், மென்மை மீட்கப்படுவதுடன் தொடர்ந்து மிருதுவாக இருக்கும்.

கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்.

கிளவுச்கள் உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும்.

ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள்.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும்.

அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள்.

கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள்.

தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

கழுத்து பராமரிப்பு – எவ்வாறு மேற்கொள்வது?

Comments

comments