மோடியின் சீர்திருத்த நடவடிக்கையால் உலகிலேயே இந்தியா தான் முதலிடம்..!

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் பெற்று அதன் மூலம் தங்கள் நாட்டு கட்டமைப்பை வளமாக்கிக் கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டு நுண்ணறிவு அடிப்படையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்து அதன்மூலம் தங்கள் நாட்டு கட்டமைப்பை வளமாக்கிக் கொள்ளும் நாடுகளின் பட்டியலை தி ஃபைனான்சியல் டைம்ஸ், எஃப்.டி.ஐ என்ற பெயரில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் பெறுவதில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை முந்தி இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.

மோடி பிரதமரான பிறகு அந்நிய நேரடி முதலீடுகளை கவரும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்தன.

2016-ம் ஆண்டில் இந்தியா, 809 திட்டங்களுக்காக 62.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது. இது 2015-ம் ஆண்டைவிட 2% அதிகமாகும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments