ரஜினி மோடி தந்திரம் எடுபடுமா? – வாசுகி பாஸ்கர்!

ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் தான் 96 ல் திமுக வந்தது என்பது சுத்த அரசியல் அறிவற்ற வாதம்.

ஜெயலலிதா செய்த அராஜகத்துக்கு மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பை ஜெயாவே ஏற்படுத்தி கொடுத்தார் என்பது தான் உண்மை.

அதற்கடுத்த காலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் பாமாவுடன் மோதல் போக்கு உருவான போது, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திமுவோடு கூட்டணியில் இருந்த பாமாவுக்கு எதிராக களம் இறங்கி வேலை செய்தனர்.

அதன் விளைவு, தேர்தல் முடிந்து திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று பாமக காரர்கள் எல்லா பேருந்துகளிலும், சுவர்களிலும் அந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜக்குபாய் படத்தை கிண்டல் செய்து ரஜினியை வெறுப்பேற்ற “ஜக்குபாய் நாக்கு நாய்” என்று எழுதி தள்ளினார்கள்.

ரஜினிக்கு என்று சினிமா அடிமைகள் குறிப்பிட்ட சதவிகிதம் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்றாலும், பொதுஜனத்தின் அங்கீகாரத்தை ரஜினியால் சம்பாதிக்க முடியவில்லை என்பதே உண்மை.

ரஜினியின் மிகத்தீவிர முதல்காட்சி முதல் ஷோ திரை ரசிகன் நான் என்றாலும், ரஜினியின் வளர்ச்சிக்கு அவரின் தனித்துவமும், முயற்சியும் தான் காரணம், தமிழக மக்கள் எல்லாம் தூக்கி நிறுத்தி அவரை வளர்க்கவில்லை என்கிற கருத்துத்தையும் ஆமோதித்தாலும், ரசனைவிதியை அரசியல் சார்போடு குழப்பிக்கொண்டு அவர் வந்தால் வாக்களிப்பேன் என்பதற்கு கட்டுக்கடங்கா அடிமைத்தனம் தேவைப்படுகிறது

இன்றைய தமிழக சூழலில் ரஜினி வந்தால் கூட பெரிய அளவில் வளர முடியுமென்பது illusion தான். இருபது வருடங்களுக்கு முன்னே எங்கோ தன்னை இணைத்துக்கொண்டு, பின்பு இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருந்திருந்தால், இந்த இருபது ஆண்டுகாலம் அவருக்கு அரசியல் பக்குவத்தையும், அறிவையும், ஒரு நிலையான இடத்தையும் அடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

அதை தவிர்த்து, 96 ல் ரஜினியால் தான் திமுக வெற்றி பெற்றது என சொல்ல தீவிர ரஜினி வெறியனாக இருக்க வேண்டும், அல்லது திமுக வை உங்களுக்கு பிடிக்காமல் இருக்க வேண்டும்.

2014 தேர்தலில் பிரச்சாரத்துக்கு சென்னை வந்த மோடி, ரஜினியை சந்தித்தது சம்பிரதாயமான சந்திப்பு என்று சொன்னாலும், தன்னை ரஜினியோடு இணக்கமாக காட்டி அதை வாக்கரசியலாக மாற்றும் தந்திரம் தான். அது எந்த அளவு எடுபட்டது என்பதை நீங்களே அறிவீர்கள்.

காசுக்காக வாக்களிக்குற கோமாளி கூட்டமாக நீங்க தமிழக மக்களை நினைத்தாலும், தங்களை அறியாமலே மக்கள் ஒரு consistent ஆன ஆட்சியை தேர்ந்து எடுக்க தான் வாக்களிக்கிறார்கள்.

இணையவாசிகளை போல youtube videos , analysis ஹிஸ்டரி, stragety எல்லாம் பேசிவிட்டு மனசில இருக்கிற கட்சிக்கு வாக்களிப்பதை போலவெல்லாம் இல்லாமல், சாமானிய மக்கள் புதிதாக ஒருவரை அங்கீகரிக்க காலஅவகாசம் எடுத்து கொள்கிறார்கள், அந்த நபர், அந்த கட்சியை அங்கீகரிக்க பொது வளர்ச்சியும், தங்கள் மனதில் வாக்களிக்கும் அளவு register ஆக அடிமேல் அடியென்று கவனயீர்ப்பு தேவை படுகிறது.

இந்த விளம்பரம் தான் சினிமா காரர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது, அதை பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.

அறிமுக நாயகனாக வருவதற்கு நடிகர்களின் வாரிசுகளுக்கு என்ட்ரி பிரீ னாலும், தனி திறமையை நிரூபிக்க திறமை அவசியம் என்பதை போல, ரஜினி வரலாம், வந்தவுடனே வந்துடுவார் என்பது மாயா.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments