ரேங்க் முறையை கைவிட்டது ஏன் ?

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலையும் தவிர்ப்பதற்காகவும் ரேங்க் நடைமுறை கைவிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், மாணவர்களுக்கிடையேயான போட்டி தற்போது பள்ளிகளுக்கு இடையேயான போட்டியாக மாறியுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

முதல் தரவரிசை மாணவர்களே கவனிக்கப்படும் நிலையில், கடைநிலை மற்றும்‌ மத்திய நிலை மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாகின்றனர்.
ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments