ரேஷன் கடைகளில் சீனி கார்டுகளுக்கு கோதுமை கிடையாது

சீனி கார்டுகளுக்கு அரிசியை தொடர்ந்து தற்போது கோதுமையும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 9.64 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடையில் ஆதார் எண், செல்போன் எண்கள் பதிவு செய்யவில்லை எனக் கூறி, கடந்த ஆண்டு நவ.25ம் தேதி 1.20 லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டன.

தற்போது அதனை பதிவு செய்ய மக்கள் தினமும், இணையதள கம்ப்யூட்டர் மையத்திற்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை ரேஷன்கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் 3 மாதமாக கிடைக்காமல் மக்கள் வெளிமார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 8.42 லட்சம் அரிசி கார்டுகள் உள்ளன. கார்டுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இந்த மாதம் அரிசியும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடையில் குறைந்த அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு மூடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் ஓரு கார்டுக்கு 10 கிலோ மட்டுமே அரிசி சப்ளை செய்யப்படுகிறது.

மீதி பத்து கிலோ அரிசி குறித்து மக்கள் கேட்டால் கோதுமை வாங்கி செல்லுங்கள் என்கின்றனர். கோதுமையும் தற்போது சப்ளை இல்லை. என கடைக்காரர்கள் கூறி பொது மக்களை திருப்பி அனுப்புகின்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் 1.25 லட்சம் சீனி கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கோதுமை இந்த மாதம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்த கார்டுதாரர்கள் கோதுமை கேட்டால், இந்த கார்டுகளுக்கு வழங்க கூடாது என மேலிடம் உத்தரவு என கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால்

இக்கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இனிமேல் சீனி கார்டுக்கு ஏற்கனவே அரிசி கிடையாது. தற்போது  கோதுமையும் இல்லை என்ற நிலைக்கு பொது மக்களை உணவுப் பொருள் வழங்கல் துறை தள்ளியுள்ளது. இதனால் பொது மக்கள் அரிசியும், கோதுமையும் முழுமையாக வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments