15 கப்பல்களில் அழுகிய நிலையில் மனித உடல்கள்

உலக நாடுகளை அணுகுண்டு ஏவுகனை சோதனையின் மூலம் அச்சுறுத்தி வருகிறது வடகொரியா. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பொருளாதார தடையும் விதித்தது.

ஆனால் வடகொரிய அதிபர் கிம்ஜாங்உன் இதை எல்லாம் கண்டு கொள்வதாக இல்லை. தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது வடகொரிய அரசு.

இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா கடற்கரையில் 15 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கப்பல்களில் டஜன் கணக்கில் அழுகிய நிலையில் மனித உடல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த கப்பல்களை பேய் கப்பல் என்றே அப்பகுதியினர் அழைக்கிறார்களாம்.
அந்த கப்பல்களில் அழுகிய நிலையில் உள்ள உடல்கள் வடகொரிய மீனவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று ஜப்பான் கடற்படை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

கிம்ஜாங் தனது ஆட்சியில் மீன்பிடித் தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக ராணுவத்தினரை பயன்படுத்து வருகிறார். இதுபோன்ற பணிக்கு அனுபவம் இல்லாத ராணுவத்தினரை அனுபவம் இல்லாத காரணத்தினால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கிம் ஜாங்கின் சர்வாதிகார ஆட்சி பிடிக்காததால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

வடகொரியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments