வயிற்று புண் உணவுகள் – என்னென்ன ?

வயிற்று புண் உணவுகள்:-

பெரும்பாலும் வயிற்று புண் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

மேலும் உணவுகளை சாப்பிடும்போது, வயிற்றுப்புண் ஆறுவதற்கும், அந்த புண் மேலும் பரவாமல் தடுப்ப‍தற்கும் உகந்த உணவு கள் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்க‍ருளியுள் ள‍னர்.

வயிற்று புண் உணவுகள் யாவை?

வீட்டில் செய்யும் இட்லி (கார சட்னி தவிர்த்து)

கீரைகள், காய்கறிகள் போன்றவை.

நன்றாக சமைத்து வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம் போன்றவை.

புளிப்புச்சத்து இல்லாதபழங்கள், ஆப்பிள் சாத்து குடி, பப்பாளி போன்றவை.

போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.

எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக்.

பொதுவாக புளிப்புச்சத்தும் காரத் தன்மையும் இல்லாத திரவ  உணவுகள் உட்கொள்வது மிக நல்லது.

வாழைத்தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.

இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் இரண்டு வேளை ஆக சிறிதளவு வல்லாரை இலைகளை சாப்பிடலாம்.

உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலாஸ்ட்ரால் குறையும்.

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.

வயிற்று புண் உணவுகள் குறிப்பு:-

முடிந்தளவு வெளியில் உணவுவிடுதிகளுக்கு சென்று அங்கு ருசிக்காக செய்ய‍ப்படும் உணவுகளை சாப் பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

வீட்டில் நமக்காக நமது ஆரோக்கியத்திற்காக செய்ய‍ப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பெமளவு நோய்கள் தடுக்க‍ப்படும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

வயிற்றுப்புண் வராமல் இருக்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

அடிக்கடி உணவு உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உண்பது அவசியம்.

காலை மற்றும் இரவு நேரத்தில் தவறாமல் உணவு உண்பது அவசியம். ஏனெனில் இரவு நேர உணவுக்கும், காலை உணவுக்கும் அதிக நேர இடைவெளி இருப்பதால் இவற்றை தவிர்த்தால் உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

Comments

comments