வரகு பொங்கல் – 30 வகை பொங்கல்

30 வகை பொங்கல், வரகு பொங்கல்

வரகு நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தலாம்.

வரகு பொங்கல் செய்ய தேவையான பொருள்கள்:

வரகு அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 50 கிராம்
எண்ணெய்- 1 ஸ்பூன்
முந்திரி – 8
சீரகம் – கால் டீஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2

வரகு பொங்கல் செய்முறை:

வரகு அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வைக்கவும். பிறகு அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

பின்பு கடாயில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, மிளகு சீரகம் , முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும்.

சாம்பார் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Comments

comments