வறட்சி அடைகிறதா உங்கள் சருமம்?

வறட்சி அடைகிறதா உங்கள் சருமம்?

சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதைப் பார்த்திருப்போம்.

அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். கைகளையும், கால்களையும் மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கமாக இருக்கும்.

இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கோல்டு க்ரீம்களைப் பூசிக்கொள்வோம்.

வறட்சி அடைகிறதா உங்கள் சருமம்? சருமம்வறட்சி அடைவதற்கான காரணங்கள்

சருமம் வறட்சியடைந்து காணப்படுதல் என்பது ஒரு நோயல்ல. இது ஒருசில புறக் காரணிகளால் ஏற்படுவதாகும். இருப்பினும் சிலருக்கு சில நோயின் காரணங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.

இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை (dermatitis) ஏற்படுத்திவிடும்.

இத்தகைய வறண்ட சருமத்திட்டுக்கள், உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக இந்த வறட்சிகளானது கைகள் மற்றும் கால்களில் அதிகம் காணப்படும்.

சிலருக்கு முகத்தில் வாய், கன்னம் மற்றும் கண்களுக்கு அடியில் இந்தத் திட்டுக்கள் காணப்படும். ஆனால் பலருக்கு இந்த வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாது.

அந்த காரணங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காற்று:-

உலர்ந்த காற்றினால், முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். ஏனெனில் உலர்ந்த காற்றானது சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமம் களையிழக்கச் செய்யும்.

அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments