வல்லாரை கீரையின் வல்லமை

வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன.

ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், வாய்ப்புண் மறைந்து விடும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, மூளைக்கு பலம் கொடுக்கிறது. மூளை அயர்ச்சி, கழுத்து வலியை குணமாக்கும். கழுத்துக்கு மேல் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும், பலப்படுத்தவும் செய்கிறது.

ரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், புரதத்தின் அளவையும் கூட்டக்கூடியது. வல்லாரையை துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம், சிறிதளவு புளி, உப்பு, மிளகாய் வைத்து அரைத்து, துவையலாகவும் உண்ணலாம்.

Comments

comments