வாய் துர் நாற்றம் விடுபடுவது எப்படி.

வாய் துர் நாற்றம் மற்றும் மூச்சுக் காற்று இவற்றிலிருந்து விடுதலை பெற எளிய வழிகள்:-

வாயின் அருகில் உங்கள் கையை வைத்துக் கொள்ளுங்கள், மெதுவாக உங்கள் சுவாசத்தை வெளியில் விடுங்கள்.

என்ன வகையான ஒரு மணத்தை உணர்கிறீர்கள், மணமற்ற காற்றா அல்லது ஒரு துர் நாற்றம் கலந்த காற்றா ?

அது துர் நாற்றம் கலந்த காற்றே என்பது உங்களின் பதில் எனில், அதை விட்டு வெளியேற இதுவே சரியான தருணம்.

யாரோ ஒருவர் உங்களின் முகத்திற்கு எதிரே அதை சொல்வதற்கு முன் அதில் இருந்து விடுபட்டு விடுவோம் வாருங்கள்.

இந்த வாய் துர் நாற்றம் உங்களை சில மனம் புண்படும் படியான சூழ்நிலைகளில் விடலாம் அல்லது உங்களின் சமூக மற்றும் போது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தெற்கு கரோலினா பல்கலைகழக பேராசிரியர் ஜான் வூடல் என்பவரின் கருத்து பின் வருமாறு வருகிறது.

“நிச்சயமாக வாய் துர் நாற்றம் உறவுகளை சீர்குலைப்பதாகவே இருக்கிறது”.

உடைகளுக்கும் நமது புறத் தோற்றத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நமது வாயின் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை.

நினைவில் கொள்ளுங்கள், நமது வாய் துர்நாற்றம் நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணத்தையே பிறரிடம் தோற்றுவிக்கும்.

வாயில் தோன்றும் ஒருவிதமான பாக்டிரியாவே இதன் காரணம், ஒரு ஆராய்ச்சியின் படி எண்பது சதவீதத்திற்கும் மேலான காரணம்
ஈறுகள், சுத்தமற்ற பற்கள், உணவுத் துணுக்குகள் உடைந்த பற்கள், வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பு, மூச்சுக் குழல் சம்பந்தமான நோய்கள், நீரிழிவு நோய் போன்றவையும் வாய் துர்நாற்றம்
ஏற்படக் காரணம் ஆகும்.

வாய் துர் நாற்றம் உள்ளதா என கண்டறிய ஒரு எளிய வழி :-

உங்களின் புறங்கை மீது நாக்கால் நக்குங்கள், நாலைந்து வினாடிகள் கழித்து அந்த இடத்தை முகர்ந்து பாருங்கள், அந்த வாசம் உங்களுக்கு எளிதில் உணர்த்தும்.

சரி, இனி இந்த வாய் துர் நாற்றத்தில் இருந்து விடுபடும் வழிகளைக் காண்போம்.

உப்பு மற்றும் எலுமிச்சை கொப்புதல்:-

மிகப் பழமையான எளிதில் செய்யக்கூடிய இயற்கையான வழி இதுவாகும்,

உப்பு – அரைத் தேக்கரண்டி
மிதமான சுடு நீர் – அரை குவளை

மேற்க் கூறிய இரண்டையும் நல்ல தெளிவான கலவையாக வரும் வரை கரைக்கவும்.
பின்பு வாயில் விட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நன்றாக கொப்பளிக்கவும்.
சில நாட்களிலேயே உங்களின் ஈறுகள் ரோஜா நிறத்தில் மாறக் கண்டால் நிச்சயமாக உங்களின் வாய் துர் நாற்றம் தீர்ந்து விட்டது என அர்த்தம்.

உப்பிற்கு பதிலாக எலுமிச்சை சாறு உபயோகித்தும் இதே கொப்பளித்தலை செய்யலாம்.

உப்பு மற்றும் எலுமிச்சை எப்படி உபயோகித்தோமோ அதே போல் பேக்கிங்பவுடர் என அறியப்படும் பேக்கிங் சோடாவையும் பயன் படுத்தலாம்.
புதினா தொடர்ச்சியாக மென்று வர நல்ல பலன் கிடைக்கும்.
தயிரில் இருக்கும் ஆசிடோபிலஸ் என்னும் ப்ரோ பயாடிக் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டிரியாவை கட்டுப்படுத்த உதவும்.

இனிப்பு நிறைந்த உணவுகள் நீரழிவை மற்றுமல்ல துர்நாற்றத்தில் இருந்தும் விடுதலை தரும்.
உடம்பிற்கு தேவையான தண்ணீரை குடித்துக் கொள்ளுங்கள், உங்களின் வாய் மற்றும் வயிறு நீர்த் தன்மையுடன் இருப்பது துர்நாற்றம் ஏற்படுவதை குறைக்கும்.

பைனாப்பிள் சாறு அதன் அதிக அமிலத் தன்மை காரணமாக துர்நாற்றம் குறைக்க உதவும்.

இரண்டு குவளை நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் கலந்து அதை பத்து – பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அதை ஆறிய பின் பருகி வர நல்ல மாற்றம் தெரியும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஒரு எளிய வழி, அதிக பைபர் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

தற்காலிக மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், மவுத் வாஸ், பப்புள் கம் போன்றவை, ஒரு தற்காலிக தீர்வைத் தான் தரும்.

எனவே நாம் முன்னர் கூறிய எளிய இயற்கையான குறிப்புகளை தொடர்ந்து செய்து வந்து நிரந்தரமான தீர்வை பெற்று துர்நாற்றம் இல்லா வாயுடன் வலம் வருவோம்.

இங்கே கூறப் பட்ட குறிப்புகள் நீங்கள் உபோயோகித்து ஒரு தீர்வு கண்டிருந்தால் இந்தப் பதிவை உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முடிவாக,

நோயற்ற, மருத்துவற்ற, இயற்கை வாழ்வியல் வாழ வேண்டும் என்னும் நேர்மறை எண்ணத்துடன் அனைவருக்கும் நம்மால் ஆனா உதவிகள் செய்து வாழ்வோம்.

வாழிய செந்தமிழ், வாழிய பாரதம் வாழிய எங்கள் தமிழ்நாடு.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டங்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Comments

comments