விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது சீனா

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது சீனா:-

தனியாக விண்வெளி மையம் அமைக்கும் முயற்சி யின் ஒரு கட்டமாக, இரு விண்வெளி வீரர்களை, சீனா, விண்வெளிக்கு அனுப்பிஉள்ளது.

அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி மையங்கள் சார்பில், விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சிக்காக, இந்த நாடுகளின் சார்பில், விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட சீனா, சொந்தமாக விண்வெளி மையத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது சீனா

அமெரிக்கா, ரஷ்யாவை தவிர, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள சீனா, இதற்காக, டியாங்க்யாங் – 2 என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி வருகிறது.

வரும், 2022ல் இருந்து, இந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி மையப் பணிகளை மேற்கொள்வதற்காக, இரு வீரர்களை, சீனா நேற்று அனுப்பியுள்ளது.

சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஷென்ஷூ – 11 என்ற விண்கலம் மூலம், இவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

விண்வெளி வீரர்கள் ஜிங் ஹாய்பெங்க், 50, மற்றும் சென் டாங்க், 37, ஆகியோர், 30 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளையும், புதிய விண்வெளி மையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.

சீனா சார்பில், விண்வெளியில் நீண்ட காலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு பயணம் இது; இதில், ஹாய்பெங்க், மூன்றாவது முறையாகவும், டாங்க், முதன்முறையாகவும் விண்வெளிக்கு பயணம் செய்கின்றனர்.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது சீனா – அடுத்தடுத்து திட்டங்கள் : <அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம், 2024ல் முடிகிறதுவிண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில், தன் விண்வெளி மையத்தை அமைக்க, சீனா திட்டமிட்டு உள்ளதுவிண்வெளியில் தற்போது, சீனாவின், 181 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போடும் வகையில், விண்வெளி திட்டங்களுக்காக, கோடிக் கணக்கில் சீனா செலவிட்டு வருகிறதுஇந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்ப, சீனா திட்டமிட்டு உள்ளது.
ஆதாரம்

தமிழக மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments