விவசாயிகள் மீது வருமானவரி..! மத்திய அரசு அதிரடி திட்டம்..!!

தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டாக பருவ மழையின்றியும், போதிய குடிநீரின்றியம் பெரும் வறட்சியில் தவித்து வருகின்றனர்.
 
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிந்தனர்.

தற்போது, தமிழகம் முழுவதும் குடிநீரின்றி கிராமந்தோறும் காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல விவசாயிகள் மீது வருமானவரி விதிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்திவருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

வருமானவரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் கலந்துகொண்டு பேசினார்.

அதில், வருமான வரி விதிப்பில் கிராமம், நகரம் மற்றும் விவசாயிகள் மற்றவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமானவரியை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, விவசாயத்தின் மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய நிலையில், தற்போது விவேக் தேப்ராய் கூறியிருப்பது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments