Home Tamilnadu Recipes வெந்தய குழம்பு | 30 வகை குழம்பு – ஒன்று

வெந்தய குழம்பு | 30 வகை குழம்பு – ஒன்று

13
0
வெந்தய குழம்பு ரெசிப்பி
வெந்தயம் குழம்பு செய்வது எப்படி.

வெந்தய குழம்பு செய்வது எப்படி என விளக்குகிறது இந்த சமையல் குறிப்பு.

நமது 30 வகை குழம்பு செய்முறை தொகுப்பில் இந்த சைவ குழம்பு வகைகள் செய்முறை, வெந்தயம் குழம்பு எப்படி செய்வது என விளக்குகிறது.

வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:-

சுண்டைக்காய் வற்றல் – மூன்று டீஸ்பூன்.
சின்ன வெங்காயம் – பதினைந்து எண்ணம்.
தனியா – ஒரு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – ஏழு அல்லது எட்டு எண்ணம்.
வெந்தயம் – மூன்று டீஸ்பூன்.
புளி – ஒரு எலுமிச்சை அளவு.
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்.
பெரிய தக்காளி – ஒன்று.
நல்லெண்ணெய் – ஆறு டீஸ்பூன்.
மிளகு – அரை டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.
பெரிய தக்காளி – ஒன்று பொடியாக நறுக்கியது.
வெல்லம் – சிறிது.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

சரி இப்போது வெந்தய குழம்பு வைப்பது எப்படி என பார்க்கலாம்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றவும்.

பின் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

வருத்தவை ஆறியதும் தண்ணீர் விட்டு மெலிதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்.

பின்பு மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.

நன்றாக வதங்கியவுடன் முன்பே அரைத்து மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

இதனுடன் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கி விடவும்.

இப்போது சுவையான வெந்தயம் குழம்பு தயார்.

நன்றி http://tamilsamayal.net/

Comments

comments