வைரஸ் பரவலுக்கு வடகொரியா காரணம்?

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை மிரட்டி வரும், ‘வான்னாக்ரை’ வைரஸ் பரவலுக்கு வட கொரியாவின் இணைய திருடர்கள் தான் காரணம் என்பதை இந்தியாவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோகர் நீல் மேத்தா கண்டுபிடித்துள்ளார்.

வட கொரியாவை சேர்ந்த, ‘லாசரஸ் குருப்’ என்ற இணைய திருடர்கள், 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தை சீரழித்தனர்.

கடந்த ஆண்டு வங்க தேச மத்திய வங்கி இணைய தளத்தை சீரழித்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம், தற்போது, ‘ரன்சம் வேர்’ வைரஸ் தொழில்நுட்பத்திற்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை நீல் மேத்தா வெளியிட்டுள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments