ஹெச். ராஜா வை விரட்டிய போராட்டக்காரர்கள்

ஹெச். ராஜா

[ad_1]

ஹெச். ராஜா வை விரட்டிய போராட்டக்காரர்கள்:-

புதுக்கோட்டை(05 மார்ச் 2017): நெடுவாசலில் பா.ஜ.க.தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக 18 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்த நெடுவாசல் கிராமத்துக்கு நேரில் சென்றார் ஹெச்.ராஜா. அப்போது ஹெச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெடுவாசலை விட்டு ஹெச்.ராஜா வெளியேற வேண்டும் என இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் நெடுவாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே பா.ஜ.க.எம்.பி இல.கணேசன், நாட்டுக்காக ஒரு தமிழகத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

[ad_2]

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments