10 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!

சண்டீகரில் 10 வயது சிறுமி அவரது உறவினர் ஒருவரால் வன்புணர்வு செய்யப்பட்டார். இதனால் அந்த சிறுமி கற்ப்பமானார்.

உடல், வயது, மனோ நிலை போன்ற காரணங்களால் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அதற்குள் அந்த சிறுமியின் கரு 32 வாரங்களைக் கடந்து வளர்ந்து விட்டது. இதனால், அவரது கருவைக் கலைத்தால் அது சிறுமிக்கும் சிசுவுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்தது.

இதையடுத்து அச்சிறுமியின் கருவை கலைக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு சண்டீகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

தற்போது குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் அந்த குழந்தை தத்தெடுக்கப்படும் வரை குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments