250 இளைஞர்கள், 25 லட்சம் நிதி! ஏரியை தூர் வாரும் பணி.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் ஏரியை தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, பெருங்களத்தூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பீர்க்கன்கரணை ஏரி. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரி தூர் வாரப்படாமல், குப்பை கழிவுகள் நிரம்பி சீரழிந்துள்ளது.

இந்த பீர்க்கன்காரணை ஏரி, பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், இரும்புலியூர், நெடுங்குன்றம், முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு பிரதனா குடிநீர் ஆதாரமாக விளங்கியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த 250 இளைஞர்கள், தங்களது முயற்சியால் ரூ.25 லட்சம் நிதி திரட்டி பீர்க்கன்காரணை ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தூர் வாரும் பணியை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து ஏரியில் கலக்கும் கழிவுநீர், குப்பைக்கிடங்கில் இருந்து கலக்கும் கழிவு நீர் ஆகியவற்றை தடுக்க அடுத்தகட்ட பணியில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிதுள்ளனர்.

மேலும் ஏரிக்கரையை பலப்படுத்துதல், பூங்கா அமைத்தல், குடீநீர் ஆதாரத்தை பெருக்குதல், கழிவுநீர் கலக்காமல் பார்த்து கொள்வதே எங்கள் நோக்கம் எனவும் கூறியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்குக்கு உபயோகிக்காமல் சமூக நலனுக்காக பயன்படுத்திய இந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments