3ம் பிரகாரத்திற்குள் இந்து மதத்தை சாராதவர்கள் செல்ல தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம் நுழைவுவாயில் அருகே நேற்று நிர்வாகம் சார்பில் திடீர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அதில், இந்து மதத்தை சாராதவர்கள் மற்றும் இந்து மதம் சாராத வெளிநாட்டவர்கள் கிளி கோபுரத்துக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது.

இதேபோல மகாசிவராத்திரியின்போது வெளிநாட்டவர்கள் 3ம்
பிரகாரத்தில் செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது இந்து மதத்தை சாராதவர்கள் 3ம் பிரகாரத்திற்குள் செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க கோயிலை தரிசிக்க வரும் இந்து மதம் சாராதவர்களையும், வெளிநாட்டவர்களையும் 3ம் பிரகாரத்திற்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மறுக்கும் நடவடிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments