5 ஆயிரம் விதைப்பந்துகளை தூவும் அரசுப் பள்ளி மாணவிகள்

நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் 5 ஆயிரம் விதைப்பந்துகளை தூவும் பணியில் அரசு பள்ளி மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் மக்கள் பாதை அமைப்பினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டியில் இருந்து நல்லிப்பாளையம் வரை இரு பக்கங்களிலும் அமைந்துள்ள சர்வீஸ் சாலையோரங்களில் விதைப்பந்துகளை தூவும் பணியில் மாணவிகள் மற்றும் மக்கள் பாதை அமைப்பினர் ஈடுபட்டனர்.

இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், சுற்றுசூழல் மன்றத்தினர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments