ஜெயலலிதாவை பார்க்க மோடி வராதது ஏன்?

ஜெயலலிதாவை பார்க்க மோடி வராதது ஏன்?

முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி வராததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்த்து உடல் நலம் விசாரிக்க ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தாலும், மருத்துவர்களிடமும், அதிமுக அமைச்சர்களிடமும் மட்டுமே பேச முடிந்தது. முதல்வரை பார்க்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் திருப்பூரில் நடந்த பி.ஜே.பி மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஆர்வத்துடன் இருக்கிறார்’’ என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ஜெயலலிதாவைக் காண வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மட்டுமே வந்து பார்த்தனர்.

ஜெயலலிதாவை பார்க்க மோடி வராதது ஏன்?

பிரதமர் மோடி ஜெயலலிதாவை பார்க்க வரும் பட்சத்தில் அவரும் நேரில் பார்க்காமல் மருத்துவர்களிடமும், அமைச்சர்களிடமும் மட்டுமே ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க நேரிடும் என்பதாலும், ஜெயலலிதாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீசியன்கள், உதவியாளார்கள் கூட மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அதற்கான ஆடைகள், கையுறைகள், கால் உறைகள் அணிந்துதான் ஜெயலலிதா இருக்கும் அறைக்கு வந்து செல்கிறார்கள்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தபோதுகூட, மருத்துவக் கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஜெயலலிதா தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வார்டை பார்த்து விட்டுச் சென்றார்.

எனவே இந்நிலையில் பிரதமர் வந்து அமைச்சர்களை மட்டும் பார்த்துவிட்டு செல்வது சரியாக இருக்காது என்பதாலேயே பிரதமர் ஜெயலலிதாவை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments