டெல்லியில் நடத்தி வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

[ad_1]

டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 7 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில்  உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அய்யாகண்ணு கூறுகையில்: போராட்டம் தற்காலிகமாகத்தான் ஒத்தி வைத்துள்ளோம்.

எங்களின் நிரந்தர கோரிக்கையான கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தை உடனடியாக அளிக்கும்வரை நாங்கள் டெல்லியிலேயே முகாமிட்டு இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments