தனி ஒருவனாக போராடி… நிஜ ஹீரோக்களை தோற்கடித்த நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி… (போட்டோ கேலரி )

சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

புதிய கிளை திறப்புவிழாவுக்கான விளம்பரம் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது.

ஆரம்பத்தில் விளம்பரத்தில் நடித்த சரவணா ஸ்டார்ஸ் பாடி கிளையின் அதிபர் எஸ்.எஸ்.சரவணன் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய கிண்டல், கேலி, நக்கல், ஏகப்பட்ட வில்லங்க செய்தி, வயிற்றெரிச்சல் கமென்ட்கள் தொடர்ந்து வந்தது.

ஆனால் எஸ்.எஸ்.சரவணன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவோடு தொடர்ந்து விளம்பரத்தில் நடித்தார்.

இவர் நடித்த இரண்டு விளம்பரங்கள் தினமும் தொலைக்காட்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க, தற்போது நடன இயக்குநர் ராஜூசுந்தரத்துடன் அவர் சேர்ந்து நடனமாடிய புது விளம்பரம் ஒன்று பட்டையை கிளப்பிவருகிறது.

விளம்பரத்தில் சினிமாவின் நிஜ ஹீரோக்களுக்கு இணையாக அதில் அவர் நடித்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ் உங்களுக்காக…

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments