தாஜ்மஹால் இந்தியாவின் களங்கம் – பாஜக

தாஜ்மஹால் இந்தியாவின் களங்கம் என்று பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய சங்கீத் சோம், ” தாஜ்மஹாலை சுற்றுலாத்துறை குறிப்பேட்டிலிருந்து உ.பி அரசு நீக்கியது சரியானதாகும்.

அது இந்தியாவின் களங்கமான சின்னம் தாஜ் மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைந்தவர்.

அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையானது.

நமது வரலாற்றை மாற்ற வேண்டும். தாஜ்மஹாலை வரலாற்றிலிருந்தே நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சங்கீத் சோமின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.பி.ராய், சங்கீத் சோமின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

இது போன்ற குறுகிய மனதுடையவர்களின் கருத்துக்களால் நமது வரலாற்று சிக்கித் தவிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

[ad_2]

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments