படுகொலை செய்தவர் குடும்பத்திற்கு பாஜக நிதியுதவி

முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தவர் குடும்பத்திற்கு ரூ 8 லட்சம் நிதியுதவி அளிக்க பாஜக தலைவர் முன்வந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி முஹம்மது அக்ஹாக் என்பவர் பசு பயங்கரவாத கும்பலால் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார்.

அஹ்லாக்கை கொலை செய்தவர்களில் ஒருவரான ரவின் சிஸொதியா என்பவர் இவ்வழக்கில் கைதான நிலையில் மரணமடைந்தார்.
சிஸோதியாவின் உடல் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரது மனைவிக்கு உள்ளூர் பாஜக தலைவர் ரூ 8 லட்சம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே அக்லாக் கொலையாளிகள் 19 பேரும் ஜாமீனில் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments