பத்தே நாட்களில் அல்சர் குணமாக ?

பத்தே நாட்களில் அல்சர் குணமாக சில வழிகள்:-

அகத்திக்கீரை – சிறிது
பூண்டு–இரண்டு பல்
மிளகு —-ஐந்து
சீரகம் –சிறிது
சமையல் மஞ்சள் — சிறிது

மேற்கூறிய ஐந்து பொருட்களையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மென்று விழுங்க வயிற்றுப் புண் குடல் புண் தொண்டைப் புண் உணவுக் குழலில் ஏற்படும் புண் புகைப் பிடிப்பதால் வரும் நுரையீரல் புண் அனைத்தும் பத்து நாட்களில் முழுமையாகக் குணமடையும் இது பலருக்குப் பயன் தந்த ஒரு அனுபவ மருத்துவம்

குறிப்பு:-

மென்று விழுங்குவது சிரமமாக இருந்தால் கசாயம் ஆக்கியும் குடிக்கலாம்

நோய் குணமாகும் வரை குடிக்க வேண்டும்

மேலும் சில மருந்துகள்

1)மணத்தக்காளி சாறு முப்பது மில்லி தினமும் ஒரு வேளை குடித்து வரலாம்.

2)முட்டைகோஸ் வேக வைத்த நீர் குடித்து வரலாம்.

3)வில்வ இலைகளை பத்துமணி நேரம் நீரில் ஊற வைத்து வடிகட்டி குடித்து வரலாம்.

4) வில்வ இல்லை சூரணம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்.

5)ஒரு சிட்டிகை சந்தனத் தூளை பாலில் கலந்து குடித்து வர அல்சர் என்னும் வயிற்றுப் புண் குணமாகும்.

அல்சர் நோயாளிகளுக்கு வாந்தியுடன் இரத்தம் வந்தால் சரியாக அதிமதுரத்தூள் சந்தனத் தூள் இரண்டையும் சம அளவு கலந்து ஒரு விரற்கடை அளவு காய்ச்சிய பாலில் கலந்து குடிக்க அல்சர் நோயாளிகளுக்கு வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments