பித்த வெடிப்பு குணமாக எளிய வழிகள்

பித்த வெடிப்பு குணமாக:-

பித்தவெடிப்பு வந்தால் கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேற ஒரு வழி பண்ணிரும்.

இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க.

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி கொள்ளுங்கள்.

அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா பித்தவெடிப்பு மறைஞ்சிரும்.

ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை இரண்டு அல்லது மூன்று தடவை கூட பயன்படுத்தலாம்.

பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

பித்த வெடிப்பு குணமாக:-

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், பித்தவெடிப்பு விரைவில் குணமாகும்

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், பித்தவெடிப்பு விரைவில் குணமாகும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும் பித்த வெடிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே காலணிகள் வாங்கும்போது, டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

இரவில் தூங்க செல்லும் முன் கால்களை நன்றாக கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், பித்த வெடிப்பு வருவதை தடுக்கலாம். வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும்.

அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இது போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள்.

அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால், அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.

Comments

comments