பி எஸ் என் எல் பிராட்பேண்ட் | 300 ஜி.பி இன்டர்நெட் வெறும் 249 ரூபாய் மட்டும்

பி எஸ் என் எல் பிராட்பேண்ட் வழங்கும் புதிய 300 ஜி.பி இன்டர்நெட் வெறும் 249 ரூபாய் மட்டும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடையே மிகுதியான வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தன்னுடைய வாடிக்கையாளர்களை இழக்காமல் தக்க வைத்துக்கொள்வதற்கு மத்திய அரசு நிறுவனமான பி எஸ் என் எல், ரூபாய் 249-க்கு மாதம் 300 கிகா பைட் (கிகா பைட் (GB)) அளவுக்கு இண்டர்நெட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

பி எஸ் என் எல்-இன் இந்த புதிய பி எஸ் என் எல் பிராட்பேண்ட் திட்டத்தின்படி, 1 கிகா பைட் (GB) இணைய சேவையை ரூபாய் 1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும்.

புதிய பி எஸ் என் எல் பிராட்பேண்ட் விவரம்:-

பி எஸ் என் எல் பிராட்பேண்ட் ஆபர்

பி எஸ் என் எல்
அன்லிமிடட் பிராட்பேண்ட்

பி எஸ் என் எல் பிராட்பேண்ட் இணைய பயன்பாடு 300 கிகா பைட் (GB)யை தாண்டினாலும், ஒரு கிகா பைட் (GB) இணையத்துக்கான கட்டணம் ரூபாய் 1-க் கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என பி எஸ் என் எல் பொது மேலாளர் லுங்கிம், நேற்று டிமாபூரில் அறிவித்திருந்தார்.

Experience Unlimited Broadband 249’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக பிராட்பேண்ட் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரூபாய் 249-க்கு மாதம் 300 கிகா பைட் (GB) இண்டர்நெட் சேவை என்பது பி எஸ் என் எல்-இல் இதுவரை அறிவித்த இண்டர்நெட் சேவைகளிலேயே மிகவும் குறைவான கட்டணத்தைக் கொண்டதாகும்.

இந்த பி எஸ் என் எல் பிராட்பேண்ட் சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜி.பி. டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜி.பி. இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதை பி.எஸ்.என்.எல் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்த சலுகை ஒரு அறிமுகச்சலுகை மட்டுமே என்பதையும் பி.எஸ்.என்.எல் தெளிவுபடுத்தியுள்ளது.

இனிமேல் புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூபாய் 249-க்கு சேவையை பெறலாம். அதற்கு பிறகு இந்த சேவைக்கு ரூபாய் 499 செலுத்த வேண்டும்.

பி எஸ் என் எல் பிராட்பேண்ட் இணைய சேவையில் நிறைய வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியாக, நாடு முழுவதும் ‘Experience Unlimited Broadband 249’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது – Thanks to News Seven

Comments

comments

One Response