மல சிக்கல் நீங்க வழிகள் – மலச்சிக்கல்

மல சிக்கல் நீங்க வேண்டுமா?

உலர்ந்த கறி வேப்பிலை, உலர்ந்த நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மறையும். மல சிக்கல் தீரும்.

உலர்ந்த கறி வேப்பிலை – கால் கிலோ, சுக்கு, மிளகு, சீரகம், உப்பு – தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
தினமும் இதை சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மந்தம், மலக்கட்டு, சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து சட்னியாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வெந்தயக் கீரையுடன் நிலாவரை இலையை சம அளவு சேர்த்து, சிறிது ஓமம் கலந்து அரைத்து இரவில் சாப்பிட்டால் காலையில் மலம் தாராளமாகக் கழிந்து, வயிற்று உப்பிசம் தணியும்.

கரிசலாங்கண்ணிக் கீரையுடன் இரண்டு கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மல சிக்கல் நீங்க வழியாகும்.

கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.

கொடி பசலைக் கீரை, கொத்த மல்லி விதை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மல சிக்கல் நீங்க வழியாகும்.

முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய் விளங்கத்த்தைச் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மல சிக்கல் சரியாகும்.

துத்திக் கீரையுடன் சிறிது வாய்விளங்கம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மல சிக்கல் நீங்க வழியாகும்..

அம்மான் பச்சரிசி கீரையை அரைத்துச் சாப்பிட்டால் கலக்கட்டு உடையும்.

பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மல சிக்கல் சரியாகும்.

பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மல சிக்கல் நீங்க வழியாகும்.

பிண்ணாக்குக் கீரையுடன் நிலாவரை இலையைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலம் தாராளமாகக் கழிந்து, குடலில் இருக்கும் கிருமிகள் ஒழியும்.

பண்ணைக் கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாள்பட்ட மல சிக்கல் நீங்க வழியாகும்.

வங்கார வள்ளைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மல சிக்கல் குணமாகும்.

மணலிக் கீரை, சோம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் மல சிக்கல் குணமாகும்.

பரட்டைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, இரவில் சாப்பிட்டால் மல சிக்கல் மறையும்.

பாற்சொரிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி இரவில் சாப்பிட்டால் மல சிக்கல் குணமாகும்.

சதகுப்பைக் கீரையுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மல சிக்கல் குணமாகும்.

இளைஞர் முதல் முதியவர் வரை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க வேண்டும்.

நம் வலக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் நம் வயிற்றின் வலப்பக்கம் இருக்கும் பித்தப்பை வயிற்றின் கனத்தால் அழுத்தப்பட்டு பித்தநீர் குறைவாக சுரக்கும்.

அதனால் சீரணம் குறைவாகும் இதன் மூலம் மல சிக்கல் அதிகம் ஆகும்.

ஆங்கில மருத்துவரும் கூட அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க சொல்கிறாகள்.

இடக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும் மலச்சிக்கல் குணமும் ஆகும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இதை பகிர்ந்து உதவுங்கள்.

தமிழகம் சார்ந்த அனைத்து முக்கியச் செய்திகளையும் எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தெறிந்து கொள்ளவும்.

மலச்சிக்கல் என்றால் என்ன – மல சிக்கல்

Comments

comments