முஸ்லிம் தொகுதியை குறி வைக்கும் பாஜக!

கேரள மாநிலத்தில் மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியை பா.ஜ.க குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது.

 

கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் வகிக்கும் மாவட்டமான மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் லீக் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்று வந்துள்ளது.

இந்த தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவருமான இ. அஹமது சமீபத்தில் மரணமடைந்ததை அடுத்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த தொகுதியை குறி வைத்து பா.ஜ.க.காய் நகர்த்தி வருகிறது.

பா.ஜ.க.சார்பில் இத்தொகுதியில் நிறுத்தப்படவுள்ள என். ஸ்ரீபிரகாஷ் என்பவர் தன்னுடைய பிரச்சாரத்தை இப்போது முதலே தொடங்கியுள்ளார்.

இதன் முதல் கட்டமாக தான் மலப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கேரளாவில் சுத்தமான மாட்டுக்கறி கிடைக்க வழி செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

கேரளாவைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் பிரதான உணவு மாட்டுக்கறி எனவே அதனை கருத்தில் கொண்டு இந்த பிரச்சாரத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பிற மாநிலங்களில் பா.ஜ.க மாட்டுக்கறிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது தவறு.

சட்டவிரோதமாக மாட்டுக்கறி விற்பவர்களையே பாஜக எதிர்க்கிறது என்றும். சட்டப்படி சுத்தமான மாட்டுக்கறி கிடைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.க அரசு இறங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் முஸ்லிம் வாக்காளர்களும் நடுநிலையாளர்களும் பா.ஜ.கவின் இந்த பொய் பிரச்சாரத்தை நம்பத் தயாரில்லை.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments