மூத்திரம் போவதை தள்ளி போடுபவரா நீங்கள் ?

மூத்திரம் போவதை தள்ளி போடுபவரா நீங்கள் ? அது பேராபத்தை விளைவிக்கும்.

கழிவறைக்கு செல்வது அல்லது மூத்திரம் போவதை தள்ளி போடுபவராக நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து, இறுதியாக வயிற்றுவலியையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் பெறுவது நமக்கான இயல்பாக போகி விட்டது.

கேட்டால் இது அவசர காலம், நம்மால் முடியவில்லை, நேரம் இல்லை என நொண்டி சாக்குகள் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் அதன் நெடுங்கால பின் விளைவு அதாவது Long Term health effect என மருத்துவர்கள்
சொல்வார்களே அது என்ன என்றே தெரியாமல்.

சரி விடுவோம், இனி நமது கழிவறை தள்ளல் அல்லது மூத்திரம் போவதை தள்ளி போடுவதால் வரும் இன்னும் பிற எதிர்மறை விசயங்களையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

எவ்வளவு நேரம் மூத்திரம் போவதை தள்ளி போட இயலும் ?

நமது உடற் கூறியல் அடிப்படையில் மூத்திரம் போவதை தள்ளி போடுவதென்பது அல்லது மலம் கழிப்பதை தள்ளிப் போடுதல் எனபது சில முக்கியக் காரணிகளை உள்ளடக்கியது, அவை எவை எவையென கீழே காண்போம்.

1. பெண்களால் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரையிலும் ஆண்களால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரையிலும் தள்ளிப் போடப் படுவது, ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய கால அளவு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், ஆனால் இந்தப் பழக்கத்தை தொடரக் கூடாது என நினைவில் கொள்ள வேண்டும்.

2. மனிதனின் உடற்கூறின் அடிப்படையும், அவன் எடுத்துக் கொள்ளும், திரவ உணவும் மேலும் அவனது சிறு நீர்ப் பையும் இதை தீர்மானிக்கும்.

3. இன்னும், அடிக்கடி சொட்டு சொட்டாக நீர் போவதை தள்ளிப் போட்டு பழக வேண்டும்.

மூத்திரம் போவதை தள்ளி போடுவதால் வரும் தீமைகள் ?

1. சிறு நீர் பை மற்றும் சிறு நீர் குழாய் நோய்கள்

2. கணைய வீக்கம் மற்றும் வயிற்று வலி

urinary infection illustartion.

Sample photo for urinary infection.

இது தவிர ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன் மற்றும் உடல் அமிலங்கள் சுரப்பு சம்பந்தப் பட்ட நோய்களும் மேலதிகமாக வரும் வாய்ப்புகள் அதிகம்.

எப்படி மூத்திரம் போவதை தள்ளி போடும் பழக்கத்தை தவிர்ப்பது ?

1. பணியில் இருந்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கும் ஒரு தடவை இருந்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி ஒரு சிறிய நடை நடந்து ஒரு வாய் நீர் அருந்தி பின் மூத்திரம் போகப் பழகலாம்.

2. மூத்திரம் போக வேண்டும் என்னும் நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

3. மூத்திரம் போவதால் வேலை பாளாகும், நேரம் இல்லை என்ற எண்ணம் வந்தால் இந்த எண்ணத்தினால் நமது உடலுக்கு செய்யும் தீங்கை நாம் உணர வேண்டும்.

முடிவாக,

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டங்களுடன் பகிர்ந்து உதவுங்கள். எங்களின் முகப்புத்தக பக்கத்துடன் இணைந்திடுங்கள்

நோயற்ற, மருத்துவற்ற, இயற்கை வாழ்வியல் வாழ வேண்டும் என்னும் நேர்மறை எண்ணத்துடன் அனைவருக்கும் நம்மால் ஆன உதவிகள் செய்து வாழ்வோம்.

வாழிய செந்தமிழ், வாழிய பாரதம் வாழிய எங்கள் தமிழ்த் திரு நாடு.

Comments

comments