விவசாயம் அழிந்து போக காரணமே?

தமிழகத்தில் நாளுக்கு நாள் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் டில்லி வரை சென்று போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்பது பழமொழி. இப்போது சேற்றில் கால் வைக்கும் விவசாயிகள் குறைந்து வருகிறார்கள்.

தமிழக கிராமங்களில் விடியற்காலையில் எழுந்த உடன் கூலி வேலை செய்யும் விவசாயிகள், ஆண்கள், பெண்கள் என தங்கள் வயல் வெளி அல்லது கிராமத்தில் அதிக நிலம் வைத்துள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்வதை பார்த்துள்ளோம்.

கடந்த சில வருடங்களாக 100 நாள் வேலை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அது முதல் விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் குறைந்து விட்டனர்.

காரணம் 100 நாள் வேலை திட்டத்தில் 8 மணிக்கு சென்று மதியம் வரை வேலை பார்த்தால் கூலி கிடைத்து விடுகிறது.

பிறகு எதற்கு விவசாய நிலத்திற்கு விடியற்காலை சென்று மாலை வரை வேலை பார்க்கவேண்டும் என்பதே அவர்கள் வாதம்.

100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறிது நேரம் குளம், குட்டைகளில் புல் பிடுங்கி விட்டு, மீதி நேரம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற ஒயர் கூடை பின்னுவது, பீடி சுற்றுவது என  தங்கள் சொந்த வேலையை செய்து கொள்கின்றனர்.

கஷ்டப்படாமல் அரசு கொடுக்கும் கூலி கிடைத்து விடுகிறது. பிறகு எதற்கு விவசாய வேலைக்கு செல்லவேண்டும் என நினைத்து விடுகின்றனர்.

அதன்காரணமாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் வயலில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் பல விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

அப்படியே வேலைக்கு வருவோர் கேட்கும் கூலி விவசாயிகளை அதிர்ச்சியடைய வைக்கிறது. சில விவசாயிகள் தங்களுக்கு வேலை ஆக வேண்டுமே என்று அதிக கூலி கொடுத்து வேலை செய்ய வைக்கின்றனர்.<சிறு விவசாயிகள் தங்கள் விவசாயத்தை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கி வேலை தேடி செல்கின்ற அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.இப்படியே சென்றால் கிராமங்கள் மரணித்துப்போகும். விவசாயம் அழிந்து போகும். பின் உணவுக்கு பிற மாநிலங்களை சார்ந்திருக்கும் நிலை வரும்.அதற்கு முன்னதாகவே அரசு விவசாயத்தை காப்பாற்ற தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஆகவே, அரசு இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றி புதிய திட்டமாக வகுக்கலாம். இதனால் விவசாயம் பாதுகாக்கப்படுவதுடன், விவசாய கூலி வேலை கிடைத்தது போலவும் ஆகும்.அரசு கவனம் செலுத்தி, இந்த திட்டத்தை முறைப்படுத்தினால் விவசாயிகள் தற்கொலைகளையும் தடுக்க முடியும் அழிந்து வரும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும்.
ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments